வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை

வைரஸால் பயன் உண்டா?

கடந்த மூன்று தினங்களாக தொடர் பணிகளில் மூழ்கியிருந்தார் வேதிவாசன். இதனால், தனக்கு வந்த மின்னஞ்சல்களை அவரால் பார்க்க இயலவில்லை.

அன்று இரவு நேரம் கிடைக்கவே, தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்தார். சரியாக நாற்பத்தி ஏழு மின்னஞ்சல்கள் இன்பாக்சில் வந்திருந்தன.

மூன்றுநாட்களில் இத்தனை மெயிலா? (மின்னஞ்சல்) என்று எண்ணியவாரே, ஒவ்வொரு மின்னஞ்சலாக பார்த்து கொண்டு வந்தார்.

அவற்றுள் சில சர்வதேச ஆய்விதழ்களில் அண்மையில் வெளி வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றின செய்திகளாக‌ இருந்தன. Continue reading “வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை”

மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்

மெழுகு சிகிச்சை

வலி அனைத்து உயிரினங்களுக்கும் வேதனை தரக்கூடிய ஒரு உணர்வு.

மருத்துவ உலகில் வலியைக் குறைப்பதற்கு மட்டுமே ஏராளமான மாத்திரைகள், வெளிப்பூச்சு மருந்துகள், ஊசி மருந்துகள் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்தே வலி குறைப்பிற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணரலாம். Continue reading “மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்”

நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை

நகை என்னும் மெய்ப்பாடு

நகை என்றால் சிரிப்பு என்று பொருள். மெய்ப்பாடு என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.

மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் நகை முக்கியமானது.

எப்பொழுதெல்லாம் சிரிப்பு வரும் என்று நமது பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன?

இகழ்ச்சியே பெரும்பாலும் சிரிப்பாக வெளிப்படுகின்றது என்றே நம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன‌.

வடிவேலு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளை நினைத்துப் பார்த்துவிட்டு இக்கட்டுரையைப் படியுங்கள். நம் இலக்கியங்கள் எவ்வளவு தெளிவாக சிரிப்பைப் பற்றி ஆராய்ந்து சொல்கின்றன எனப் புரிந்து கொள்ளலாம். Continue reading “நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை”

கொள்ளு சட்னி செய்வது எப்படி?

சுவையான கொள்ளு சட்னி

கொள்ளு சட்னி அருமையான சட்னி ஆகும்.

கொள்ளு சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி.

கொள்ளின் நன்மைகள் அறிய இங்கே சொடுக்கவும்.

எளிய முறையில் கொள்ளு சட்னி சுவையாக எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சட்னி செய்வது எப்படி?”

காலம் மாறும் போது

காலம் மாறும் போது

காலம் மாறும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

கடின முயற்சியினை உடையவர்கள் காலத்தின் மாற்றத்தினால் முயற்சியில்லாதவர்களாக மாறி விடுகின்றனர். இதனையே இக்கதை விளக்குகிறது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.

முறப்பநாடு என்ற நாட்டினை சூரசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் சூரசேனனும் அவனுடைய அமைச்சருமான வீரசேனனும் நாட்டில் உள்ள குடிமக்களை நேரில் பார்த்து வரவேண்டும் என்று எண்ணி மாறுவேடத்தில் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருந்தனர். Continue reading “காலம் மாறும் போது”