குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை

குறைத்து மதிப்பிடாதே

குறைத்து மதிப்பிடாதே என்பது யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.

பூங்காவனம் என்றொரு காட்டில் நிறைய மரங்கள் செடிகள் இருந்தன. அப்போது மழைகாலம் நிலவியது.

மழைகாலத்தின் இறுதியில் அக்காட்டில் இருந்த ரோஜா செடியில் அழகான சிவப்பு நிற ரோஜா பூத்தது. அந்த ரோஜாவின் அழகானது அங்கிருந்த மரம், செடி, கொடிகளை மிகவும் கவர்ந்தது.

Continue reading “குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை”

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்”

அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்

பாரதி

அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரியாகும்.

ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களில் ஒன்று தைரியம். ஏனென்றால் தைரியம் இல்லாத மனிதனிடம் மற்ற நல்ல குணங்கள் அமைவது கடினம்.

அச்சம் அல்லது பயம் என்பது ஓர் அடிப்படை உணர்ச்சி. நம்மில் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதைவிட அதிகம் பயத்தையே உணர்கின்றோம். Continue reading “அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்”

கருப்புக் கண்ணாடி – அறிவியல் குறுங்கதை

கருப்புக் கண்ணாடி

அன்றைய தினம் கல்லூரி ஒன்றில் ’அறிவியல் மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு அறிவியல் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்த அம்மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஆசிரியர் வேதிவாசனும் அழைக்கப்பட்டிருந்தார். Continue reading “கருப்புக் கண்ணாடி – அறிவியல் குறுங்கதை”

ஏலக்காய் – மசாலாக்களின் ராணி

ஏலக்காய் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மணம் ஆகும்.

உலகில் உள்ள விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் இது வெண்ணிலா மற்றும் குங்குமப்பூவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இது நம் நாட்டில் பராம்பரியமாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இது வெறும் வாயில் போட்டு மெல்லப்படும் இயற்கை சுவாசப் புத்துணர்வுப் பொருளாகவும் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “ஏலக்காய் – மசாலாக்களின் ராணி”