மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை

மாடென்று எதனைச் சொல்வீர் - சிறுகதை

“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.

மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.

மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.

Continue reading “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”

கால்தடம் குறும்படம் விமர்சனம்

கால்தடம் குறும்படம்

கால்தடம் குறும்படம் குழந்தைகளின் உலகை நமக்குக் காட்டுகின்றது. அது ஏழை பணக்காரன் என்ற ஒன்றில் இல்லை. மாறாக‌ அது எல்லையற்ற அன்பை உடையது.

பணக்காரர் வீடு ஒன்றில் தந்தை, பெண் குழந்தையின் விளையாட்டுகளைத் தன் செல்போனில் படம் எடுத்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் பெண்குழந்தை விலை உயர்ந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு மூடுகிறது; எழுந்து நடக்கிறது.

அப்பாவின் ஷூ ஒரு ஓரத்தில் கிடக்கிறது. அதில் கால்களை விட்டு மிகுந்த சந்தோஷத்தில் அந்த ஷூ உடன் நடந்து பார்க்கிறது.

Continue reading “கால்தடம் குறும்படம் விமர்சனம்”

தவம் கிடக்கும் ஜீவன்கள்

தவம் கிடக்கும் ஜீவன்கள்

பெரும்பாலான குடும்பங்களில் இன்று கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பொருளாதார நிலைமையை உயர்த்தி, அதிக வசதிகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பணம்! பணம்!! பணம்!!! அவர்களின் தாரக மந்திரமே பணம்தான்.

காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு வீட்டை விட்டுச் சென்றால், இரவு தாமதமாகத்தான் வீடு திரும்புகின்றனர்.

Continue reading “தவம் கிடக்கும் ஜீவன்கள்”

பலூன் டாக்டர் குறும்படம் விமர்சனம்

பலூன் டாக்டர்

பலூன் டாக்டர் குறும்படம் வறுமையின் வலி உணர்த்தும் உலகியல் படம்.

வறுமை, வாழ்வின் பல அம்சங்களை வாழ விடாமல் செய்துவிடும் கோரமான முகங்களை உடையது. தீராத பயணங்களும் முழுமை பெறாத இன்பங்களும் இதன் வடிவங்கள் ஆகி நிற்கும்.

வாழ வேண்டியவற்றை வாழாமல், ஏதோ ஒன்றை வாழ்ந்து விடுவதையே ஏழ்மை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது.

இதனை மிகத் தெளிவாக இப்படம் விளக்கிச் சொல்கிறது.

Continue reading “பலூன் டாக்டர் குறும்படம் விமர்சனம்”