தந்தையும் மகளும் குறும்படம் விமர்சனம்

பிரிவுத் துயரின் வலி மற்றும் குழந்தையின் பாசம் எத்தகையது என்பதை மனதின் அடிஆழம் வரை சென்று உணர்த்தும் இயங்குபடம் (ANIMATION) தந்தையும் மகளும் குறும்படம்.

ஒரு பெண் குழந்தை, தன் தகப்பனார் மேல் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துவாள்.

இன்னொரு தாயாக, இன்னொரு தங்கையாக, இவ்வாறாக அவள் காட்டும் பாசம் இந்த உலகில் வேறு எங்கும் இல்லாதது.

அதன் விசுவரூப தரிசனம் எங்கும் கிடைக்காது. பெண் குழந்தைகளின் அந்தப் பாசவலையில் எந்தத் தகப்பனாரும் சிக்காமல் இருந்ததில்லை.

Continue reading “தந்தையும் மகளும் குறும்படம் விமர்சனம்”

மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை

மைக்கேல் தாத்தா

மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.

அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிட‌ந்தது.

Continue reading “மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை”

மகளின் பிறந்த நாள் வாழ்த்து

என் உயிர் தந்த என் உயிருக்கு

உயிர் வந்த நாள் இன்று!

கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்

கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!

Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”

பாகப்பிரிவினை – ‍சிறுகதை

பாகப்பிரிவினை

“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.

அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.

அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.

“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.

உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.

ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.

Continue reading “பாகப்பிரிவினை – ‍சிறுகதை”