நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

ஞாயிற்றுக் கிழமை.

ஆபீஸ் இல்லை என்பதால் எட்டு மணிக்குதான் எழுந்தான் ராகவ்.

எழுந்து கிணற்றடிக்குச் சென்று பல் துலக்கிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்தபோது, அம்மா தாளிட்டிருந்த வாசல் கதவைத் திறந்து “அட அட! வாங்கோண்ணா! வாங்கோ! வாங்கோ!” என்று அழைத்தார்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

வருடியது வசப்படும் வரை… – கவிஞர் கவியரசன்

மழைநீர் சேர்ப்போம்

வருடலின் சுகமறிந்த சிறு மனம்
வருடியதை வசப்படுத்திக் கொள்ள
வலை விரித்து காத்துக் கிடக்கிறது
வருடியது வசப்படும் வரை
வற்றியபடி!

Continue reading “வருடியது வசப்படும் வரை… – கவிஞர் கவியரசன்”

அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ

திருமணம்

அந்த எந்திரப் பறவை தரையிறங்க பத்து நிமிடமே இருந்தது. கிட்டத்தட்ட எல்லா பயணியரும் பரபரப்புடன் இருந்தனர். வசந்த் லேசான புன்முறுவலுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து மணி நேரம் பொறுமையாகப் பிரயாணம் செய்பவர்களால் பத்து நிமிடம் காத்திருக்க முடியவில்லை. அவரவருக்கு என்று பல சொந்த காரணங்கள் இருக்கக் கூடும்.

அறிவிப்பின்படி சீட் பெல்ட் அணிந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். மறுநிமிடம் மூடிய இமைகளுக்குள் லிசியின் முகம் வந்து மறைந்தது. லிசி அவனைக் கட்டிப் பிடித்து வழி அனுப்பியிருந்தாள்.

Continue reading “அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ”

தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்

தெருவெங்கும் கிணறிருந்தது

மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது

வருணன் என்றொரு கடவுளை வணங்க

வற்றாமல் அது இருந்தது

Continue reading “தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்”