இறகுகள் இல்லாத பறவை – கவிதை

இறகுகள் இல்லாத பறவை போல

உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்

தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை

தந்தை அன்பும் கிடைத்ததில்லை

Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”

விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை

விபரீத எண்ணத்தின் விளைவு - சிறுகதை

அருண் மீது விக்டருக்கு ரொம்ப நாட்களாகவே அளவு கடந்த பொறாமை.

அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்று வகுப்பிலேயே முதலாவதாகத் திகழும் அவனை, ஒரே ஒரு தடவையாவது அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

Continue reading “விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை”

சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?

இன்றைக்கு நாகரிகத்தால் அலங்கார நாய்கள் வளர்க்கும் மேதைகள் உருவாகி விட்டார்கள். அவற்றிற்கான செலவினம் மிக மிக அதிகம். பெற்றோர்க்குச் செலவிடும் அளவை விட‌ அதிகம்.

எத்தனையோ வீடுகளில் பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலும், நாய்கள் குளிர்பதன அறைகளிலும் இருப்பதைக் காணலாம்.

Continue reading “சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?”

பொறுப்பாளி யார்?

‘தாயிற் சிறந்த‌ கோயில் இல்லை’ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது பழமொழி. ஒரு குறிப்பிட்ட வயதுவரை குழந்தையானது தாயைச் சார்ந்தே வளர்ந்து வருகிறது.

பள்ளியில் சேர்க்கும் வரை என்று சொல்லலாம். உறக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்கச் செய்து ஆடைகளை மாட்டி, உணவை ஊட்டி பள்ளிக்கு அனுப்பும் வரை தாயானவள் தன் குழந்தையுடன் ஒன்றிப் போய்விடுகிறாள்.

குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என தாயானவள் தன் குழந்தைக்குக் கோயில் மாதிரிதான்.

கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் குழந்தைக்கு விவரம் தெரிகிற வயது வந்ததும், தந்தையின் கடமையும் ஆரம்பமாகிவிடுகிறது.

Continue reading “பொறுப்பாளி யார்?”