இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை

இதயத்தில் ஒருத்(தீ) - சிறுகதை

மாலை நேரத்தில் சுமார் நாலரை மணி அளவில், வேலை விசயமாக வெளியூருக்கு செல்ல இருந்த‌ என் நண்பன் அரவிந்தை வழியனுப்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் அவனுடன் நின்று கொண்டிருந்தேன்.

அரவிந்த் செல்ல வேண்டிய பேருந்துக்கு முன்னதாக நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 515F என்ற தடத்தில் ஓடும் பேருந்து, நாங்கள் நின்று கொண்டிருந்த அதே நிறுத்தத்தில் வந்து நின்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பேருந்தில்தான் நான் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.

Continue reading “இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை”

அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”