நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.
அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது.