கெடுவான் – சிறுகதை

கெடுவான்

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் செங்குளம் கிராமத்தின் சந்திப்பு இருக்கிறது. சுமார் ஐநூறு குடும்பங்களை உள்ளடக்கிய கிராமம்.

சந்திப்பிற்கும் ஊருக்கும்மான இடைவெளி ஒரு மைல் தொலைவு இருக்கும். அந்த ஒரு மைல் தொலைவு சாலையின் குறுக்காக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில்வே இருப்புப் பாதை ஒன்று சென்றது.

உச்சி வெயில் அனலாய் காய்ந்துக் கொண்டிருந்தது. சாலையெங்கிலும் கானல் நீர் காட்சி தந்து கொண்டிருந்தது.

Continue reading “கெடுவான் – சிறுகதை”

ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்

ஏரி
ஏரி நீர் சேமிப்பின் முக்கிய அங்கம். நம் முன்னோர்கள் காலத்தில் ஏரிகள் எப்படி இருந்தன என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மனித நாகரீகம் ஆரம்பித்த காலம் தொட்டு நீர்நிலைகள் மற்றும் வேளாண்மை என்பன இன்றியமையாதவையாக இருந்துள்ளன.

பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளில் பண்டைய நாகரிகம் பரந்திருக்கக் காண்கின்றோம். மனிதர்கள் முதலில் ஆற்றை மட்டும் சார்ந்து இருந்துள்ளனர். பிறகு நீர்நிலைகள், குட்டைகள், ஏரிகள் உருவாக்கப்பட்டு அதன் வழியே பாசனம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மூலம் பாசனம் வந்தது, குட்டைகளில் இருந்து ஏற்றம் மூலம் பாசனம் செய்யப்பட்டது.

Continue reading “ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்”

இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

இனிக்கும் புளியம்பழம்

 நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
    
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

Continue reading “இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை”

தனி மரம் – சிறுகதை

தனி மரம்

ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.

“வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.

கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.

Continue reading “தனி மரம் – சிறுகதை”

நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்

நகரமயமாதல்

நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சொந்த காரணங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றார்கள்.

விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாமல் போய்விட்டது. கிராமப்புறங்களில் வேறு தொழில்களும் சரியாக அமையவில்லை. எனவே கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு வருகின்றார்கள். Continue reading “நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்”