குடும்பத்தின் குதூகலம் குழந்தை
கும்பிடும் குலதெய்வம் குழந்தை
அன்பின் அடைக்கலம் குழந்தை
அழுதாலும் அழகு குழந்தை (மேலும்…)
பள்ளி செல்லுவோம்
பள்ளி செல்லுவோம்
படிப்போடு பண்பாடும் தரும்
பள்ளி செல்லுவோம்
துள்ளி செல்லுவோம்
துள்ளி செல்லுவோம்
துடிப்போடு துவளாமல் தினந்தினம்
துள்ளி செல்லுவோம் (மேலும்…)
ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.
ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.
மணிதான் தலைவர்.
தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.
சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.
கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். (மேலும்…)
தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்
மனம் நிற்பவரே ஆசிரியர்
கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்
கற்று கொள்பவரும் ஆசிரியர் (மேலும்…)