மாணவர் – புதுக்குறள்

அரசுப்பள்ளி

பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்

பருவம் உலகின் உருவம்

 

கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை

மாணவ பருவத்தின் முதலறை

 

வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்

புள்ளி மாணவர் பள்ளி Continue reading “மாணவர் – புதுக்குறள்”

கறையில்லா மனம் – சிறுகதை

கறையில்லா மனம்

அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன.

“எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா?”

அமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன்.

“இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா?” என்றாள் கணவனை. Continue reading “கறையில்லா மனம் – சிறுகதை”

கல்விக் கோயில் – சிறுகதை

கல்விக் கோவில்

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார்.

“இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு.

அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து முடிவெடுக்கத்தான் கூடியிருக்கோம். ஆளுக்கொரு வசதியச் சொல்லுங்கப்பா.” Continue reading “கல்விக் கோயில் – சிறுகதை”