சுயமியால் சுயமிழப்பவர்கள்

சுயமியால் சுயமிழப்பவர்கள்

தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது

தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…

முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்

அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…

Continue reading “சுயமியால் சுயமிழப்பவர்கள்”

மெய்ப்பாடு – கவிதை

மெய்ப்பாடு

மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்

மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு

(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)

கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து

முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து

திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்

சுவையோ நகை 

Continue reading “மெய்ப்பாடு – கவிதை”

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

மகாகவி பாரதியார்

தடம் பதிக்க முனையும் மனிதனை

தடயம் ஏதுமின்றி அழிக்க நினைக்கும்

விடம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில்

இடம் பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

Continue reading “வீழ்வேன் என்று நினைத்தாயோ?”

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைமகள் பிறப்பினில் தரணியும் மிளிரட்டும்

வைக்கும் அடியெல்லாம் வெற்றியைக் கொடுக்கட்டும்

வாழ்வும் வளமாக வசந்தமும் வீசட்டும்

மரபும் மரிக்காமல் புதுமையும் செழிக்கட்டும்

Continue reading “தை பிறந்தால் வழி பிறக்கும்”