பாகற்காய் – சிறுகதை

சுவையான பாகற்காய் பொரியல்

தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.

இப்படிதான் என் பள்ளி தோழன் பழனிவேலுவின் தங்கை மாலதி, எனக்கு கிடைத்த பாசமலர். இந்த பாசமலர் இப்போது புகுந்த வீட்டில் போய் வாடி வதங்குகிறது.

Continue reading “பாகற்காய் – சிறுகதை”

ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை

ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது - சிறுகதை

தேவி 96 கிலோ இருக்கிறாள். 30 வயதாகிறது. எந்த துணிக்கடையிலும் எந்த ரெடிமேட் துணியும் இவளுக்குப் பொருத்தமாய் கிடைப்பதில்லை.

ஒருநாள், நகரின் பெரிய ஜவுளி கடையில் நான்கு பக்கமும் கண்ணாடி கொண்ட ட்ரையல் ரூமில் தன் உருவத்தைப் பார்த்துத் தானே மிரண்டு விட்டாள்.

Continue reading “ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை”

செந்திலும் நானும் – சிறுகதை

செந்திலும் நானும் - சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

Continue reading “செந்திலும் நானும் – சிறுகதை”

வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை

வார்த்தை தவறிவிட்டாய்

கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.

சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.

இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.

Continue reading “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”

அன்னக்கிளி – சிறுகதை

அன்னக்கிளி

அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.

அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.

தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.

அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.

Continue reading “அன்னக்கிளி – சிறுகதை”