பூசணி விதை உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய கொண்டுள்ளது. இந்த சிறிய விதைக்குள் உள்ள அபரிதமான சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் நண்பன் கொடுத்து இதனை தின்றிருக்கிறேன். அவனுடைய அம்மா சமையலுக்கு வாங்கிய பூசணிக்காயில் இருந்த விதைகளை, விறகு அடுப்பு சாம்பலில் தோய்த்து உலர வைத்துப் பதப்படுத்தியதாகக் கூறினான். லேசான இனிப்புச் சுவையுடன் அருமையாக இருந்தது.