ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
(மேலும்…)ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
(மேலும்…)ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்
நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை
ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்
நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை
எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்
(மேலும்…)எனக்கு வெகு நாட்களாகக் கண்ணப்ப நாயனார் புராணம் குறித்த ஓர் ஐயம்! அதில், திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ‘குடுமித் தேவர்‘ என்று தான் குறிப்பிடப்படுகிறார்.
கண்ணப்பரும், அர்ச்சகரும் அக்குடுமித் தேவருக்கு மலர்கள் சூடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வருணனைகளும் சிவன் உருவச்சிலை வடிவாக இருந்ததையே காட்டுகின்றன.
(மேலும்…)காரைக்கால் அம்மையார் எப்போதும் இறைவனின் திருவடியின் அருகில் இருந்து அவரைப் பாடும் அரும்பேற்றினைப் பெற்றவர். இறையருளால் மாய மாங்கனியை இருமுறை பெற்றவர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்கள் அடங்குவர். அவர்கள் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆவர். இம்மூவருள்ளும் காரைக்கால் அம்மையாரே மூத்தவர்.
சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை வைத்திருப்பதைக் காணலாம். அவர்களுள் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த கோலத்திலும் ஏனையோர் நின்ற கோலத்திலும் அருளுவர்.
(மேலும்…)