புதினா புலாவ் செய்வது எப்படி?

புதினா புலாவ் எளிதில் செய்யக் கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பொதுவாகவே புதினா புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இதனுடைய மணம் மற்றும் சுவை நிறைய பேருக்கு பிடித்தமான ஒன்று.

பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுத்து அனுப்புவது என்று யோசிப்பவர்களுக்கும், என்ன கொடுத்து அனுப்பினாலும் அப்படியே திருப்பிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பவர்களுக்கும் இது வரப்பிரசாதம். Continue reading “புதினா புலாவ் செய்வது எப்படி?”

சோள குழிப்பணியாரம் செய்வது எப்படி?

சுவையான சோள குழிப்பணியாரம்

சோள குழிப்பணியாரம் அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக கொடுத்து அனுப்பலாம்.

இது உண்பதற்கு மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். சிறுதானிய வகையான சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

என்னுடைய சிறுவயதில் எங்கள் ஊரில் கடைகளிலும், தெருக்களிலும் சோள குழிபணியாரத்தை விற்பனை செய்வார்கள்.

குழிப்பணியாரம் எண்ணெயை குறைவாக பயன்படுத்தி தயார் செய்யப்படுவதால் இது ஆரோக்கியமானதும் கூட.

இனி சுவையான சோளக் குழிப்பணியாரம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சோள குழிப்பணியாரம் செய்வது எப்படி?”

புழுங்கல் அரிசி புட்டு செய்வது எப்படி?

சுவையான புழுங்கல் அரிசி புட்டு

புழுங்கல் அரிசி புட்டு அருமையான சிற்றுண்டி ஆகும். இது உண்பதற்கு மிகவும் மென்மையாக இருக்கும்.

எங்கள் பாட்டி வீட்டிற்கு நாங்கள் சிறுவயதில் விருந்தினர்களாகச் செல்லும் போது, இதனை செய்து உண்ணக் கொடுப்பார்கள். Continue reading “புழுங்கல் அரிசி புட்டு செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தனியாகவோ, சாதத்துடன் சேர்த்து உண்ணவோ ஏற்ற நொறுக்குத்தீனி ஆகும். இதனை எளிதாக வீட்டிலே செய்யலாம்.

குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போதோ, ஸ்நாக்ஸ் பாக்ஸ்க்கோ இதனை செய்து கொடுத்து அனுப்பலாம். சுலபமான முறையில் சுவையான உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?”

ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?

ராகி கொழுக்கட்டை

ராகி கொழுக்கட்டை  (கேழ்வரகு கொழுக்கட்டை) சத்தான சிற்றுண்டி ஆகும். ராகியில் புட்டு, பூரி, தோசை, ஆலு பரோட்டா, இனிப்பு ரொட்டி, கார ரொட்டி என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை செய்யும் முறை பற்றி ஏற்கனவே இனிது இணைய இதழில் பதிவிட்டுள்ளோம்.

ராகியில் செய்யப்படும் கொழுக்கட்டை தயார் செய்ய குறைந்த நேரமே ஆவதோடு சுவையும் அதிகம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இதனைச் செய்து அசத்துங்கள். Continue reading “ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?”