கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?

கம்பு இடியாப்பம்

கம்பு இடியாப்பம் சத்தான ஆரோக்கியமான உணவு ஆகும். கம்பு சிறுதானிய வகைகளுள் ஒன்று. இன்றைய காலத்தில் சிறுதானியங்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். கம்பில் அடை, தோசை, லட்டு, குழிபணியாரம், கூழ் உள்ளிட்ட உணவுகளை செய்து உண்ணலாம்.

அதே நேரத்தில் கம்பில் இடியாப்பம் செய்வது, எண்ணெய் இல்லாத ஆரோக்கியமான உணவாகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இனி சுவையான கம்பு இடியாப்பம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?”

பிரண்டை சூப் செய்வது எப்படி?

சுவையான பிரண்டை சூப்

பிரண்டை சூப் ஆரோக்கியமானதும், அவசியமானதுமான சூப். பிரண்டை குறுக்கு வலி, கைகால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து.

எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டதால் பிரண்டை வஜ்ரவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

Continue reading “பிரண்டை சூப் செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு வெங்காய வடை

உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. வீட்டிற்கு திடீர் விருந்தினர் வருகையின் போது இதனை செய்து அசத்தலாம்.

இதற்கு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி?”

பைனாப்பிள் ஜாம் செய்வது எப்படி?

பைனாப்பிள் ஜாம்

பைனாப்பிள் ஜாம் மணமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் ஜாம் ஆகும். நிறைய கடைகளில் பிரட்டிற்கு பைனாப்பிள் ஜாம் வைத்தே தருவர்.

இதனை வீட்டில் சுலபமாகவும், வேறு ஏதும் பதப்படுத்தப்படும் பொருட்கள் (Preservatives) சேர்க்கமால் செய்யலாம்.

இப்போது பைனாப்பிள் சீசன் ஆதலால் இதனை தயார் செய்து குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

Continue reading “பைனாப்பிள் ஜாம் செய்வது எப்படி?”

நெய் கடலை செய்வது எப்படி?

நெய் கடலை

நெய் கடலை அருமையான சிற்றுண்டி வகை ஆகும். இதனை மாலை நேரங்களில் தேநீருடன் ருசிக்கலாம். கடலைப் பருப்பினைக் கொண்டு செய்யப்படுவதால் இது பசி தாங்கும். வீட்டில் இதனை தயார் செய்வது ஆரோக்கியமானதும் கூட.

இதனைத் தயார் செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இனி சுவையான நெய் கடலை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “நெய் கடலை செய்வது எப்படி?”