க(ச)லப்புத் திருமணம் – கதை

முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.

Continue reading “க(ச)லப்புத் திருமணம் – கதை”

நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை

சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.

சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.

Continue reading “நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை”

நல்ல குடும்பம் – ஓர் பார்வை

நல்ல குடும்பம் நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை.

துறவறம் மற்றும் இல்லறம் என்பது இரு வாழ்க்கை முறைகள். ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கிடையாது.

உண்மையைச் சொல்வதென்றால் நிறையப் பேருக்கு உகந்தது இல்லறம்தான். இனிய இல்லறம் இந்த பூமியைச் சொர்க்கமாக மாற்றும்.

Continue reading “நல்ல குடும்பம் – ஓர் பார்வை”

கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை

இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி.

இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு.

இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி.

Continue reading “கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை”

இருமனம் திருமணம் – சிறுகதை

இந்து திருமணம்

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.

ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.

“என்ன கீதா?”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”

“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”

Continue reading “இருமனம் திருமணம் – சிறுகதை”