தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்குஎரிய

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  கோதை தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம் ஆகும்.

இந்த உலகில் உள்ள இன்பங்கள் எல்லாம் நிலையானவை என்று எண்ணி உலக மக்கள் அதில் மூழ்கி இருக்கின்றனர். அவை நிலையானவை அல்ல. திருமாலே நிலையானவர்.

ஆதலால் இறைவனைப் போற்றிப் பாடி, நிலையான இன்பத்தைப் பெற வாருங்கள் என்று இப்பாசுரம் அழைக்கிறது.

Continue reading “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌”

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு’ என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் எட்டாவது பாசுரம் ஆகும்.

பாவை நோன்பின் போது கண்ணனின் வீரச்செயல்களைப் புகழ்ந்து பாடினால் அவன் நமக்கு விரும்பிய பலனைத் தருவான்.

விடிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கண்ணனின் புகழினைப் பாட உன்னுடைய உறக்கத்தை கலைத்து விட்டு வா என்று தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை அழைக்கும் பாசுரம் அழைக்கும் பாசுரம். Continue reading “கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு”

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து என்ற பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான‌ ஆண்டாள் அருளிய  கோதை மொழி என போற்றப்படும் திருப்பாவையின் ஏழாவது பாசுரம் ஆகும்.

பாவை நோன்பிற்காக இளம் பெண்கள் கூட்டமாகச் சென்று நீராடிவிட்டு இறைவனின் புகழினைப் பாடி வழிபாடு மேற்கொள்வர்.

அவ்வாறு நீராட செல்லும்போது, தங்களின் கூட்டத்தின் தலைவியான பெண் உறங்கிக் கொண்டிருப்பதாகவும், அப்பெண்ணை எழுப்புவதாகவும் அமைந்த பாசுரம்.

Continue reading “கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து”

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

புள்ளின் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் என்ற பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் ஆறாவது பாசுரம் ஆகும்.

உறக்கத்தில் இருக்கும் பெண், திருமாலின் பெருமைகளைக் கேட்டு, குளிர்ந்த உள்ளத்துடன் எழுவதற்காக பாடப்படும் பாசுரம் இது.

பாம்பணையில் பள்ளி கொண்டு, முனிவர்களாலும் யோகிகளாலும் போற்றப்படும், அரி எனப்படும் திருமாலின் பெயரினைக் கேட்டு உள்ளம் குளிர, பாவையை அழைக்கும் பைந்தமிழ் பாசுரம்.

Continue reading “புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்”

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற பாடல் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் ஆகும்.

உலகினைக் காக்கும் கடவுளான திருமாலின் திருப்பெயர்களைக் கூறிக் கொண்டிருந்தால் நம்முடைய பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கி விடும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

Continue reading “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை”