செந்தமிழ் சொற்களஞ்சியம் அகரமுதலி

அகரமுதலி

அகரமுதலி (2019) என்ற பெயருடன் உள்ள tamillexicon.com என்ற‌ இணையதளம், தமிழின் பல்வேறு பரிணாமங்களையும் உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

பல்வேறு உள்கட்டமைப்புடன், கடினஉழைப்புடன், பலருக்கும் பயன்படும் விதத்தில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேறு மொழிப் பேசும் ஒருவர் இத்தளத்தைக் கொண்டு மிக விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு விடலாம்.

Continue reading “செந்தமிழ் சொற்களஞ்சியம் அகரமுதலி”

மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

மழைப்பெண்

நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.

நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி. Continue reading “மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை”

இணையம் அறிவோமா?

இணையம் அறிவோமா?

ஆதிமனிதன் ஒருசெய்தியை அருகில் இல்லாத இன்னொருவனுக்குக்  கூற நினைத்தால், பல்வேறு உடன்பாட்டு முயற்சிகளினால் குறிப்பிட்ட கால இடைவெளியினால் மட்டுமே கூற முடிந்தது. அதற்காக அவன் ஒளி, ஒலிகளை மற்றும் சமிக்கைகளைப் பயன்படுத்தினான்.

செய்தியைக்கூறப் பயன்படு பொருள்கள் பல இருந்தன. உதாரணமாக, “சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேன். காப்பாற்றுங்கள்” என்பதைப் பிறருக்குத் தெரிவிக்கப் புகையை ஏற்படுத்தித் தெரிவிப்பது ஆதிகால முறையாக இருந்தது.

Continue reading “இணையம் அறிவோமா?”

ரசவாதியின் ரசக்கலவை

ரசவாதியின் ரசக்கலவை

நான் வெகுவிரைவில் நிலைகுலைந்து

உருமாறிப் போனாலும் போவேன்.

அந்தத் தடுமாற்றத்தில் பைத்தியக்காரனாகி எங்கோ எதையோ

இழந்தவனைப் போல் தேடித் திரிந்தாலும் திரியலாம் Continue reading “ரசவாதியின் ரசக்கலவை”

மனஸ்தாபம் – கவிதை

மனஸ்தாபம்

சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம்

எதிலிருந்தும் தொடங்குகிறன.

புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த

நச்சரிப்பில் அடி நாளங்கள் கூசுகின்றன.

எரிமலையின் வெடிப்பை

வார்த்தைகளாக்கி வதம் செய்கின்றாய் சுகமாய். Continue reading “மனஸ்தாபம் – கவிதை”