ஒரு காலத்தில்
அவன் அந்த தெருக்களில்
நண்பர்கள் புடைசூழ
நடந்து கொண்டிருந்தான்
காற்றில் கரைந்த
அந்த பேச்சுக்கள்
இன்னும் மிச்சம் மீதி என்று
ஏதோ அவன் காதில்
ஒலித்துக் கொண்டிருந்தது
புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
ஒரு காலத்தில்
அவன் அந்த தெருக்களில்
நண்பர்கள் புடைசூழ
நடந்து கொண்டிருந்தான்
காற்றில் கரைந்த
அந்த பேச்சுக்கள்
இன்னும் மிச்சம் மீதி என்று
ஏதோ அவன் காதில்
ஒலித்துக் கொண்டிருந்தது
யாரும் யாருடனும்
எவ்வளவு தான் பேசினாலும்
எதுவும் எள்ளளவும்
புரிந்துகொள்ளப் படவில்லை
எல்லாமுமே ஒரு வலியோடுதான்
நம்மை வந்து அடைகிறது
நான் ஒரு மலரை
ரசிக்கவேண்டும் என்றாலும்
துன்பப்படவேண்டி இருக்கிறது
எதையுமே நீ பார்க்கிற
அறிந்த பொருட்களின்
மீதான அர்த்தங்கள்
எல்லாம் காலத்தின்
நதியில் கரைகிறது
(மேலும்…)