என் காதலி

Beautiful Girl

பளிங்கு போன்ற நெற்றி அவளுக்கு
பொற்றாமரைக்குளம் போன்ற பொட்டு வட்டமாய்
மக்கள்தொகை அதிகமான நாட்டைப் போல் அவள் முடிக்கற்றைகள்

பனிசறுக்கு போன்ற கன்னங்கள் அவளுக்கு
குடைராட்டினம் போல் தோடு அவளுக்கு
சாய்ந்த பைசா கோபுரம் போன்ற மூக்கு அவளுக்கு
அடுக்குமாடி பஸ் போன்ற பற்கள் அவளுக்கு

வழுக்கும் பாறை போன்ற கழுத்து அவளுக்கு
குற்றால அருவி போல அவள் அணிந்துள்ள முத்து மாலை
உயர்ந்த மலை போன்ற மார்பு அவளுக்கு
தொங்கும் பள்ளத்தாக்கு போன்ற இடை அவளுக்கு

மூங்கில் மரம் போன்ற கைகள் அவளுக்கு
எங்க ஊர் இனிப்பு சேவு போன்ற விரல்கள் அவளுக்கு
வாழைப்பூ போன்ற பாதம் அவளுக்கு
இவ்வளவு அழகிய காதலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை

– சுருதி

 

புகை

புகை

புகை பிடித்து உனக்கு கொள்ளி வைக்கும் மனிதா,
பின்வரும் மற்றவனுக்கும் புகை அளிப்பது ஏன்?
பகிர்ந்துண்டு வாழத்தான் சொன்னார்கள்,
புகைத்துப் பலரைக் கொல்ல சொன்னார்களா?

– சுருதி

 

வியர்க்க வியர்க்க

Walking

வியர்க்க வியர்க்க வேலை செய்கிறான்
உணவு வேண்டி தொழிலாளி,
வியர்க்க வியர்க்க நடக்கிறான்
உணவு செரிக்க முதலாளி.

– சுருதி

 

அறியாமை

மரங்கள்

அரசமரத்தை சுற்றினால் அழகான பிள்ளை
வேப்பமரத்தை சுற்றினால் வேண்டுதல் நடக்கும்
ஆலமரத்தை சுற்றினால் அருகுபோல் வாழ்க்கை
அரசமரத்தினால் – மலடி பட்டம் போகும்
வேப்பமரத்தினால் – தரித்திர பட்டம் போகும்
ஆலமரத்தினால் – துக்கம் போகும்
எல்லாமே வேண்டும் என்ற பேராசையினால்
வீட்டில் அனைத்தையுமே வைக்க – முடிவு
வீடு முழுவதும் மரங்களாய்
அறியாமை கொண்ட அவள்
வெளியில் சாலையில் தனியாய்!

– சுருதி