அடிப்படைக் கடமைகள் என்பவை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும்.
கடமைகளின்றி பொறுப்பற்றத் தன்மையில் செயல்படும் போது ஒழுங்கின்மைக்கும், கட்டுப்பாடற்ற தன்மைக்கும் நாட்டை இட்டுச் செல்லும்.
எனவேதான் அரசியலமைப்புத் திருத்தம் நான்காம் பகுதியில் தனித்தலைப்பில் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பை வடிவமைத்தக் கொடுத்தவர்கள் அரசியலமைப்பு அடிப்படையில் சமூக நலத்தை பேணிக் காப்பதற்காக ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை வரையறுத்துள்ளனர்.
இவை அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பகுதி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளன. பகுதி 3,4,4-ஏ ஆகிய மூன்று பகுதிகளும் இந்தியக் குடிமக்களின் நலனைப் பேணுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளன.
1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் படி இந்திய அரசியல் சட்டம் பகுதி 4-ஏ பிரிவு 51-ஏ இல் இந்திய குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது.
1. அரசியல் சட்டம், தேசிய சின்னம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பு அளித்தல்.
2. சுதந்திர போராட்ட வீர்களின் உன்னத உணர்வை நினைத்துப் பேணல்
3. நாட்டின் இறைமை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாத்தல்
4. நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயல் ஆற்றுதல்
5. மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளைத் துறந்து சகோதர உணர்வுடன் தேசிய ஒற்றுமையை ஓங்கச் செய்தல்
6. நம்முடைய பண்பாடு பன்முகப் பாராம்பரியக் கலாச்சாரத்தின் மேன்மையை மதித்தல்
7. இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து மேம்படுத்துதல்
8. அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளர்த்தல்
9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்
10. தன்னுடைய முயற்சியினால் அனைத்துத் துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
11. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
நம்முடைய அடிப்படைக் கடமைகள் பற்றித் தெரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்படுவோம்.