கொரோனாவின் கடுமை
கொடுமையை
கொல்லுங்கள் இறைவா!
உம்மையே நம்பினோம்
கொரோனாவை
வெல்லுங்கள் இறைவா!
விளக்கேற்றி விலக்கு கேட்கிறோம்
விலக்கிடுங்கள் இறைவா!
உலக உயிரினங்கள் உயிர்வாழ
உதவிடுங்கள் இறைவா!
தவமிருக்கிறோம் வீட்டில்
கொரோனாவை
விரட்டிடுங்கள் இறைவா!
இறைவா! இறைவா! கொரோனாவை
இல்லாமல் செய் இறைவா!
இறைவா! இறைவா! எங்கள்
இனிமையை மீட்டு வா
விரைவா! விரைவா!
மறுமொழி இடவும்