ஊரடங்கு நாளிதனை
உனக்காக மாற்ற வா!
உணர்ந்து அதை ரசிக்க வா!
நீண்ட நாட்கள்
செய்யாத பணிகளையே முடிக்கலாம்!
நல்ல நல்ல புத்தகங்கள்
படித்து ரசித்து மகிழலாம்!
பழைய நட்பை தொடர்பு கொண்டு
கதைகள் பேசி சிரிக்கலாம்!
ஆடு புலி ஆட்டத்தையே
மீண்டும் ஆடி களிக்கலாம்!
அடுப்பங்கரையில் நுழைந்து கொஞ்சம்
சமையல் கலையும் கற்கலாம்!
மறைந்து போன தனித்திறனில்
சில மணித்துளிகள் மிதக்கலாம்!
எப்படியோ இந்த நாளை
இனிமையாகக் கடந்திட …
அடுத்து வரும் நாளினை
வரவேற்க முடியுமாம்!
நீண்ட நாள் காணாத
என் கவிதைத் தோழியை
நானும் தேடப் போகிறேன்…
அவள் தழுவலிலே
பிறக்கும் புதுக்கவிதையோடு திரும்ப
ஆசை கொள்கிறேன்!
கைபேசி: 9865802942