சுவரொட்டியில் இருந்த புல்வெளியை
கிழித்து மேய்ந்தது மாநகர மாடு
மின் கம்பங்களில் கூடமைத்துக் கொள்கின்றன
நகரத்து நாகரீக காக்கைகள்
சிறுநீர் கழிக்கவும் சில்லறை கேட்டு
கையேந்தி நிற்கிறது தூய்மைப் பெரு நகரம்
பாவப்பட்ட ஜென்மமாய் இன்னும் கூட தன்னை
கழுவிக் கொள்ளாமல் அழுக்காய் அலைகிறது கூவம்
யாவருக்குமே தெரிந்திருக்கிறது
எது ஒன்று நடந்தாலும் அதனுடனே செல்பி…
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!