குற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.
குற்றாலத்தில் உள்ள அருவிகள்
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.
1)பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.
2) சிற்றருவி (CHITRARUVI), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தா ன் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.
3) செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.
4) அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.
5) ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.
6) ஐந்தருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.
7) பழைய குற்றாலம் அருவி ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.
8)புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது
9) ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.
தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள் எவை என்று அறிய இங்கே சொடுக்கவும்.
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:
1) தெற்குமலை எஸ்டேட் – தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
2) ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.
3) பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை
4) சிறு குழந்தை பூங்காக்கள்.
குற்றாலத்தின் சிறப்புகள்
1) குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.
2) தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.
3) மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.
குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்
1) பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும்.
2) பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் – குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.
3) இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
4) தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர்கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
5) புளியரையில் உள்ள தட்சினாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
6) பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
7) ஆரியன்காவு ஐயப்பன்கோவில், குற்றாலத்திலிருந்து 35 கிமீ.
அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்
1) பாலருவி – கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
2) பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.
3) அகஸ்தியர் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.
4) பாணத்தீர்த்தம் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.
5) பாபநாசம் (லோயர்) அணை – பாபநாசம் அருகே உள்ளது.
6) பாபநாசம் (உயர்), காரையார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.
7) சேர்வலார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.
8)மணிமுத்தாறு அணை – பாபநாசம் அருகே உள்ளது.
9) களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் – பாபநாசம் அருகே உள்ளது.
10) மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் – பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.
குற்றாலத்துக்கு வருவது எப்படி
சாலை மூலமாக
சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
மதுரை: 160 கி.மீ.
திருநெல்வேலி: 59 கி.மீ
தென்காசி: 5 கி.மீ
செங்கோட்டை: 5 கி.மீ
மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகளாலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம்.
மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும் குற்றாலத்தை அடையலாம்.
தொடர் வண்டி மூலமாக
குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லை, ஆனால் செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்தை அடையலாம்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர் வண்டிகள்
பொதிகை எக்ஸ்பிரஸ்: செங்கோட்டை – சென்னை, சென்னை – செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை – மதுரை, மதுரை – செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை – திருநெல்வேலி, திருநெல்வேலி – செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை – கொல்லம், கொல்லம் – செங்கோட்டை
சில நேரங்களில் சென்னை, ஈரோடு மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு வண்டிகள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன.
அனைவரும் ஒரு தடவையாவது குற்றாலம் வந்து இயற்கை அன்னை அளித்திருக்கும் பரிசை பாருங்கள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!