கொடிய கொரோனாவே
இன்னும் பசி தீரவில்லையோ?
எத்தனை உயிர்களை உண்ணுவாய்
எதற்காக இந்த தண்டனை?
இறப்புகளைக் கண்டு
இரக்கப்படாமல் இன்னும்
இருக்கின்றாயே உலகில்
கவசம் அணிந்தும்
சுவாசம் இல்லையே
கெஞ்சி கேட்கிறேன்
அஞ்சி வாழும்
பிஞ்சு மனம் கொண்ட
மக்களைக் கோரப் பிடியிலிருந்து
விட்டுவிடு
எங்களை
வாடவிடாமல் வாழவிடு
கெஞ்சுகிறோம் விட்டுவிடு
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்