நாடு நலம் பெற வேண்டும் – நாமும்
பாடுபட்டால் உயர்ந்தோங்கும் – பின்னே
தேடிவரும் கூட்டம் நம்நாட்டுக்கு
ஈடு இணையில்லை என
நாடி என்றும் புகழ் பேசும் – இங்கே
வாழ மனம் இனித் தூண்டும்!
தியாகம் செய்த மாந்தர் பலர் ஆவர்
நியாயம் நிலைபெற வீழ்ந்தார் உயிர் நீத்தார்
தேசம் பெரிதென நோக்கம் ஒன்றென வாழ்ந்த
நேசர் புகழோங்க – நாளும்
பேசு தினமும் வாழ்த்து !
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com