திருவிழா வந்துருச்சு!
தேர்தல் திருவிழா வந்துருச்சு!!
ஓட்டு போடும் மனுசங்க
ஒவ்வொருத்தரும் கடவுள் தான்
வேட்பாளர் வரம் கேட்கும் பக்தர்களாம்
பாவம் இந்த கடவுளுக்கு
படையல் வைக்க தேவையில்லை!
பகட்டான வாக்குறுதி பேசினாலே மனமிரங்கும்!
பணம் கொடுத்தா சில கடவுள்
பல்லைக் காட்டி ஓடிவரும்!
விரலில் மை வச்சு விட்டு
ஓட்டு பொட்டியில பூட்டி வச்சு
5 வருசம் அமைதியாக
தூங்க போகும் சாத்தானா மாறிவிடும்!
கொஞ்சம் நீங்க யோசிங்க
கடவுள் உங்க பலம் மறந்து
கொஞ்சம் பணம் வாங்கி விட்டு
சாமியார்கள் ( வேட்பாளர்கள்) கிட்ட
ஏமாந்து சாத்தானா மாறாதீங்க!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942