தட்டு கொடுத்தாலும்
பட்டு கொடுத்தாலும்
துட்டு கொடுத்தாலும்
கேட்டு வாங்காதே
ஓட்டை விற்காதே
போட்டுவிடு உனது ஓட்டை
காத்துவிடு நமது நாட்டை
ஜனநாயகம் காக்க
பணநாயம் தோற்க
வாக்களிப்போம் நேர்மையாக
வாக்கு நமது உரிமை
வாழ்வில் அது பெருமை
மனமார ஓட்டுபோடு
நிலைமாற ஓட்டுபோடு
வாக்களிப்போம் வாக்களிப்போம்
வாழ்வுபெற வாக்களிப்போம்
வாக்களிப்போம் வாக்களிப்போம்
நேர்மையாக வாக்களிப்போம்
வாக்களிப்போம் வாக்களிப்பேம்
கடமையெண்ணி வாக்களிப்போம்
பணம் பெறாதே ஓட்டுக்கு
பலவீனம் உன் வீட்டுக்கு
வாக்களிப்போம் வாக்களிப்போம்
நாடு உயர வாக்களிப்போம்
நாம் உயர வாக்களிப்போம்

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்