நெஞ்சில் நிறைந்த நேரம்

காளையடக்கி வீரம் காட்ட நேரம் வந்துருச்சு – இந்த

கன்னிப் பொன்னு வரைஞ்சகோலம் மனசில் நெறைஞ்சிருக்கு

வாலைக்குமரிக வைக்கும் பொங்கல் வாசனை பார்த்து – அதை

வாங்கிப்போக வாசப்பூக்கள் வந்து நின்னுருக்கு

 

ஓலைக்குள்ள ஒளிஞ்சிருந்த கிழங்கு வந்துருச்சு – அதை

உரிச்சு எடுத்து அவிச்சுதின்ன மனசில் துடிப்பிருக்கு

பாலைப்போல பளிங்குநிறத்தில் வீடும் ஆயிருச்சு – அந்த

பக்கத்துல கரும்புமஞ்சளும் காதல் பேசி நிக்கி

 

உழைச்ச சனங்க ஒன்று சேர்ந்து கூடி நின்னுருச்சு – அங்க

உருகும் சூரியன் ஒளியில் மனசு உருகி நின்னுருச்சு

ஏழையாக இருப்பதெல்லாம் மறந்துபோயிருச்சு – இங்க

எல்லோருக்கும் பொங்கல்நாளு ஒன்னுன்னு ஆயிருச்சு

 

மாலைப் பொழுது மக்கள் கூட்டம் ஓடிவந்துருச்சு – அந்த

மந்தையோரம் உறியடிக்கும் அழகை ரசிப்பதற்கு

நாளைவிடியும் பொழுதும் நமக்கு நன்மை செய்வதற்கு – இந்த

நாளின் இன்பம் நல்லதமிழ் போல் நெஞ்சில் நிறைஞ்சிருக்கு

இராசபாளையம் முருகேசன்    கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.