சினத்தை வெல்லு
குணத்தை அள்ளு
சேவல் முன் விழி
விழாது சோம்பல் பழி
ஆணவம் அழி
வெற்றிக்கு வழி
அன்பைக் கொடு தராளமாய்
அறிவை எடு ஏராளமாய்
முயற்சியை விடாதே
தளர்ச்சியை தொடாதே
படிக்க பாடுபடு
பயத்தை ஓடவிடு
அன்னையை மதி
தந்தையை துதி
மறந்திடு தீமையை
நினைத்திடு நன்மையை
உயர்ந்திட பணிந்திடு
உண்மையை உணர்த்திடு
புகழ் பெற
மனம் திற
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!