பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கையூட்டாக கொடுத்து சங்கத்தமிழ் கேட்டு, கையூட்டை துவக்கி வைத்தது தமிழ் மூதாட்டியே.
ஒரு மிராசுதார் தன் தோட்டத்தில் விளைந்த முதல் வாழைத்தாரை கடவுளுக்கு நைவேத்தியமாக தன் வேலைக்காரன் மூலமாக கோவிலுக்கு கொடுத்தனுப்பினார். அவன் வழியில் பசி காரணமாக இடையிடையே மெலிதாக இருந்த இரண்டு பழங்களைத் தின்று விட்டான்.
அதை அறிந்த அந்த மிராசுதார் தவறு செய்த வேலைக்காரனை அடித்து துரத்தினாராம். (அந்த காலத்திலேயே கோள் சொல்வோர் நிறைய உண்டு போலும்).
அன்று அவரது கனவில் வந்த கடவுள் எனக்கு இரண்டு மெல்லிய பழங்கள் மட்டுமே கிடைத்தன என்றாராம்.
இது குன்றக்குடி அடிகளார் பட்டிமன்ற மேடையில் கூறிய கதை.
வாழும் தெய்வங்களான நம் பெற்றோர், நமக்கு வரமாக வந்த வாழ்க்கைத்துணை / குழந்தைகள் / உடன் பிறந்தோர் / நண்பர்கள் /பணிச்சூழலில் நம்மோடு இனிதாக பயணிப்போர் ஆகியோர்களது மனம் நோகாது கொண்டாட உண்மையில் கடவுள் இருந்தால் மனம் மகிழ்வார்.
கைபேசி: 9865802942