உழுது வைத்த மண்
பொல பொல வென
உதிரியாய்
ஒன்றுமேயில்லாமல்
வெற்றுத் தரையென
விழிமூடி தூங்கியடியே…
சிறு சாரல்
சில நாட்கள்
பெய்த பின்னே…
மண்ணும் இறுகி
புல்லும் புதுசெடியுமென
பச்சை ஆடையிலே
மாறியதென்ன…
விதைகள்
எப்போதும் வீணாவதில்லை
சூழல் மாறிவிட
முளைவிட
மறப்பதில்லை
நல்ல விதைகள்
நம் மனதில்
இருக்கும் எனில்
மலர் காடே வாழ்வாகும்
பார் போற்ற
நிலைத்திருக்கும்
கைபேசி: 9865802942