மழைநீர் சேர்ப்போம்

மழைநீர் சேர்ப்போம்

மழைத்துளி ஒவ்வொன்றும் மருந்தாகும் – என

மக்கள் எண்ணிடல் நலமாகும்

பிழைத்திடும் உயிர்கள் யாவர்க்கும் – இங்கு

பெரும் பயன் இதனால் உண்டாகும்

 

உழைத்திட செல்வமும் சேர்ந்திடலாம் – அது

உயர்ந்தநல் வாழ்வையும் கொடுத்திடலாம்

தழைத்திடும் தாவரம் வளர்த்திடுமா? – அது

தந்திடும் உணவினைக் கொடுத்திடுமா?

 

நிலத்தடி நீரினை நாம் உறிஞ்ச – இந்த

நிலமும் குலுங்கி அழுதிடுதே!

குலுங்கியே நிலமகள் தரும் துயரை – இங்கு

குவிந்துள்ள செல்வம் தடுத்திடுமா?

 

துளித்துளி யாய்விழும் மழைத்துளியை – இங்கு

துவண்டுள்ள நிலத்திற்கு கொடுத்திடவே

அளித்திடும் அது நமக்கு – இனி

அனைவரும் சேர்ப்போம் மழை நீர்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)