கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில
கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு
பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
கால்நடைகள் பூட்டி மாட்டு வண்டி போன காலம்
சாலையோரம் மரங்கள் சில்லென்று
காற்றைத் தந்த கதைகளும் இங்க உண்டு
கார் பைக் மோட்டார் என்று
இப்ப மனுசன் பறக்குற காலமிது
கண்ணுக்கு எட்டும் வரை
காற்றும் இல்லை நீரும் இல்லை
கைகொடுக்க யாரும் இல்லை
ஓடு ஓடு ஓடு என ஓடும் மக்கள்
இளைப்பாற இம்மி கூட இடமில்லை
தண்ணீர் தர ஏதுமில்லை
மனித வாழ்க்கைக்கு இதில் லாபமில்லை
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942