வாளெடுத்து
வெட்டி
துண்டங்களாக்கி
கொத்தி
குதறி வீழ்த்தினாலும்
வல்லூறுகள்
பிராண்டிச் சிதைத்து
அலகால் இழுத்தாலும்
குதறிக் கிழித்தாலும்
கோலெடுத்து
குத்திக் குடைத்தாலும்
வலிக்காது
வலித்தது
உயிர்ப் பிழிந்து
வேடிக்கைப் பார்க்கும்
உன்
மவுனம்
சூட்டுக்கோலெடுத்து
புண்ணில்
நுழைத்தாலும்
தீட்டிய
கழுமரத்தில் அமர வைத்து
பிளந்தாலும்
தீ மூட்டிய
எண்ணைக் கொப்பறையில்
போட்டுப் பொரித்தாலும்
வலிக்காது வலிக்காது
வலிக்கும்
உன் வாய் திறவா மவுனத்தால்
மூச்சுத் திணறும்
கொதி நீரில் மூழ்கடித்தாலும்
காற்றில்லா அறையில்
கனல் மூட்டி வதைத்தாலும்
அந்தரத்தில் மிதக்கவிட்டு
விஷ அம்புகளால் ஏவி
துளைத்தாலும்
வலிக்காது
பார்வையும் வார்த்தையுமற்ற
உன் மவுனம் மட்டும்
உடல் புகுந்து உயிர் தேடிக் கொல்லாத வதைப்பே
வலியின் உச்சம்
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
வார்த்தை வளமான பிரதேசத்திலிருந்து வந்து வளத்தை பிரதிபலிக்கிறது சிந்தனை சிறகடித்து இறக்கைகளை விரிக்கிறது