கழனி விளைஞ்சு கதிர் அறுத்து
நெல் மணிகள் இல்லம் புக
வீதியிலே பாய் விரிச்சு
விழி முடிப் பயமின்றி தூங்கியது
நம் பரம்பரைதான்!
நெல் அவிக்க ஒரு பானை
வீதியெல்லாம் சுற்றி வரும்!
அதில் அவிச்ச அரிசிதான்
வீதிக்கே சோறு போடும்!
அத்தனையும் மாறிப் போச்சு
தவிடு மணம் அழிஞ்சு போச்சு!
அரைவேக்காடு அரிசி இப்ப
ஊருக்குள்ளே திரியலாச்சு!
அத்தனையும் மீள இங்கு வரும் போது
அழகாக வாழ்வினிக்கும்!
பலமான உடல் கிடைக்கும்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!