கல்லாய் போனதே உள்ளமே ஆனதே
நல்லார் சேர்ந்தபின் தூய்மையைக் கொண்டதே
பெற்றோர் போற்றியே நாளுமே ஆகிட
கற்றார் நாடுவர் வாழ்விலே சேருவர்
தூற்றும் மாந்தரும் பின்னரே வாழ்த்திட
நேற்று சாய்த்தவர் உன்னிலை ஏற்றிட
வெற்றி சேர்ந்திட உண்மையை நாட்டுக
கொற்றம் யாவுமே தொடரும் உன்னையே
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!