வஞ்சி(க்கு) விருத்தம்

அழகுப் பெண்

அழகுச் சிலைபோல் அமர்ந்தினிது
பழகும் மெழுகுப் பதுமையினாள்
கழகத் தமிழ்போல் கவர்ந்துயிரை
விழுங்கி வளர்க்கும் விழுமையினாள்

Continue reading “வஞ்சி(க்கு) விருத்தம்”

பிப்ரவரி 14 – சிறுகதை

பிப்ரவரி 14 - சிறுகதை

முத்துவேல் ஸ்பிளண்டர் பைக்கினை பெட்டி கடையின் ஓரமாக, தான் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தன் புத்தக பையை எடுத்துக்கொண்டு வேக வேகமாக அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

பஸ் ஸ்டாப் அடைந்ததும் அங்கு நின்றவரிடம்

“சார் 7ஜி பஸ் போயிடுச்சா?” என்று கேட்டான்.

“இன்னும் வரல தம்பி.”

“மணி எட்டரை ஆயிடுச்சு. இன்னும் வரலைங்களா?”

Continue reading “பிப்ரவரி 14 – சிறுகதை”

காதல் மணம் கவிதை

மழையின் துளிகள் மனதை
நனைக்க நனைக்க
காதல்மனைவி பக்கம் நிற்க நிற்க
காதல் நினைவுகள் மனதில்
உதிக்க உதிக்க
நினைக்க நினைக்க சுகமாய்
சுமக்க சுமக்க மனமோ
துள்ளிக் குதிக்கக் குதிக்க
இன்பம் இன்பம் பேரின்பம்!

Continue reading “காதல் மணம் கவிதை”

கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை

இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி.

இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு.

இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி.

Continue reading “கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை”