வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி

வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி அளவிட முடியாதது. ஆனால் அவற்றின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய பழைய வரலாற்று ஆசிரியர்கள் முதல் இன்று எழுதும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வரை தாம் எழுதிய வரலாற்றில், முன்னோர் எழுதிய துறைகளை மட்டுமே தாமும் எழுதி விட்டுச் சென்று விடுகின்றனர்.

Continue reading “வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி”

கி.அன்புமொழிக்கு விருது

அன்புமொழிக்கு விருது

மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், திருமதி கே.ஆர்.செல்லம்மாள் நினைவு உலகத் தமிழாய்வு மையம், மதுரை
சரஸ்வதி அறக்கட்டளை & அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை இணைந்து வழங்கும் சர்வதேச முத்தமிழ் விருதுகள் விழா 2022 ல் எழுத்தாளர் கி.அன்புமொழி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற கி.அன்புமொழி அவர்களை இனிது வாழ்த்துகிறது.

Continue reading “கி.அன்புமொழிக்கு விருது”

ஆவுடையக்காள் – அரிய தமிழ்க் கவி

ஆவுடையக்காள் - அரிய தமிழ்க் கவி

ஆவுடையக்காள் தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத ஓர் அரிய பெண் கவிஞர். காரைக்கால் அம்மையார், அவ்வையார் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவரா அவர் என அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

Continue reading “ஆவுடையக்காள் – அரிய தமிழ்க் கவி”

உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்

உள்பரிமாணங்கள் என்னும் நூல் சிறந்த கொங்கணி மொழிச் சிறுகதைகளின் தொகுப்பு. ‘அந்தர் ஆயாமி‘ என்பது மூல நூலின் பெயர். இந்த கொங்கணிச் சிறுகதை நூல் 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற‌து.

இதன் ஆசிரியர் கோகுல்தாஸ் பிரபு, ஒரு சிறந்த கொங்கணி மொழி எழுத்தாளர். கோபிநாத் ஹெக்டே இதனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி இந்நூலை வெளியிட்டுள்ளது.

உள்பரிமாணங்கள் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஆசிரியர், இக்கட்டான நிலைகளில் மக்களின் எண்ணங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Continue reading “உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்”

தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்

தொன்மை அல்ல; தொடர்ச்சியே தமிழின் பெருமை என்பதை நாம் அறிவோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பதை விட, இன்றும் உயிர்ப்போடு இருப்பதே தமிழின் பெருமை.

தமிழின் இலக்கியம் தன்னிகரற்றது.

அறம் சார்ந்ததாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் முன்னோர்கள் இலக்கியம் படைத்தார்கள்.

நம்மைப் பற்றிப் பிறர் அறியக் கூடிய புற வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும், நம்மைப் பற்றி நாம் மட்டுமே அறியும் அக வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வாழ்க்கை இலக்கணம் சொல்லிச் சென்றார்கள்.

Continue reading “தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்”