சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி

இந்துமதம் என்பது, தொடக்கம் காண இயலாத பிரம்மாண்டத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமையுடையதாகும்.

கிளை விரித்தாளும் ஆலமரத்தைப் போன்று ஒன்றே பலவாக மாறும் தன்மையுடையதாகும்.

அறிவைக் கண்டு அடைவதற்கும், பிறப்பின் சூட்சுமத்தை விளங்கிக் கொள்வதற்கும், நிகழ்வுகளில் தெளிவு பெறுவதற்கும் துணையாய் இருப்பது இந்து மதமாகும். Continue reading “சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி”

அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்

அபியும் அக்ஞேயும்
அக்ஞே
அக்ஞே

அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் அழகானவை. வாசகர்களுக்கு அலாதியான அனுபவம் தருபவை.

தமிழ் கவிஞர் பீ.மு.அபிபுல்லாவும் (B.M. Abibullah),  இந்தி கவிஞர் ச‌ச்சிதானந்த் ஹீரானந்த் வாஸ்த்யாயன் அக்ஞேயும் (Sachithananda Hiranand Vastyayan Agne)  ஒரே வயதினரோ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல.

எனினும் அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் ஒருமித்த தன்மை உடையனவாகவும், கவிப்பொருளில் ஒற்றுமை உடையனவாகவும் காணப் பெறுகின்றன. Continue reading “அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்”

அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்

அழியாச் சுடர்கள்

ஒளிமயமான பட்டை தீட்டப்பட்ட வைரங்களை மட்டும் வைத்து ஒரு அற்புதமான மாளிகை கட்டினால் எவ்வாறு இருக்குமோ அது போன்ற தன்மையது “அழியாச் சுடர்கள்” (https://azhiyasudargal.blogspot.com) என்னும் இத்தளம். Continue reading “அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்”

விளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்‌

தமிழ்டிக்.காம்

விளையாட்டாய்த் தமிழ் கற்க வேண்டுமா?

குழந்தைகளுக்குத் தமிழில் ஆர்வம் உண்டாக்க வேண்டுமா?

தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகியவற்றில் புலமை பெற வேண்டுமா?

ஜெர்மன் மொழியை அறிந்து புலமை பெறவேண்டுமா?

தமிழ்டிக்ட்.காம் (tamildict.com) என்கின்ற​ இத்தளம் உங்களுக்குப் பெரும் உதவி செய்யும்.

ஜெர்மன் மொழி கற்க நிறையக் காணொளிகள் உள்ளன.
அகராதிகள் மூன்று மொழியையும் ஒரு சேரக் கற்க பயன்படுகின்றன. Continue reading “விளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்‌”