அன்னை – கவிதை

அன்றொரு நாள்

தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…

Continue reading “அன்னை – கவிதை”

மீனவனின் குமுறல் – கவிதை

கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…

இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!

Continue reading “மீனவனின் குமுறல் – கவிதை”

மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை

மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை

கடலை எடுப்பதற்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டிருந்தாள் தனம்.

‘கடலை போட்டிருக்கும் பிஞ்சைக் காட்டுக்கு இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போகணும்.

காட்டுக்குப் போற வழியில அம்மையப்புரத்தில நாலு ஆளகள மாடசாமி கூட்டிட்டு வந்தா பரவாயில்ல.

இப்ப நம்மளோட வர்ற மூணு ஆளுகளையும் சேர்த்து மொத்தம் ஏழு பேரு ஆயிருவாக. நட்ட பாதி இடத்து கடலைய இன்னைக்கு புடங்கிடலாம்.’ என்று எண்ணியபடி அவள் நடந்தாள்.

Continue reading “மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை”