சுமை தாங்கி – சிறுகதை

“வசந்தா… வசந்தா … என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

சீக்கிரம் வா. ஆபீசுக்கு நேரமாச்சு.” என்றான் கேசவன்.

“ச்…இதோ வந்துட்டேங்க. காலையில எந்திரிச்சா உங்க அம்மா அப்பாவுக்கு பணிவிடை செய்யணும். புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பணும். இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நீங்க வேற காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கிறீங்க…” என்று கடுகடுத்தாள் வசந்தா.

Continue reading “சுமை தாங்கி – சிறுகதை”

வெற்றியது உம் பக்கம்!

சீரான பாடம் தன்னை சிதறாமல் சிந்தை செய்து

பக்கம் பாராமல் நினைவு எழுந்து

நோக்கம் தெளிவாக தெரித்தெழுதி

தேர்வை சிறப்பாக எதிர்நோக்கும்

மாணாக்கர் பொன்மணிகாள் !

Continue reading “வெற்றியது உம் பக்கம்!”

ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை

ஒரு ஜோடி ஷூக்கள் - சிறுகதை

காரிருளைக் கிழித்துக் கொண்டு ஹெளரா பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.

சோம்பல் முறித்து தலைநிமிர்ந்த போதுதான் அம்முதியவரைப் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் அப்பெட்டியில் இல்லை.

அந்த முதியவருக்கு எழுவது வயது இருக்கும். பார்ப்பவர்கள் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அழுக்கு படிந்த சட்டையும், ‘தொள தொள’ பாண்ட் கசங்கிய நிலையிலும் அணிந்திருந்தார்.

Continue reading “ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை”