என் கையை விடமாட்டிங்கப்பா

தந்தை மகள்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.

தந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”

மகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”

“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?” தந்தை கேட்கிறார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.

அறிவும் பண்பும்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

அறிவும் பண்பும் இணைந்த வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாகும். அதையே திருவள்ளுவர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் ஒளி விளக்காக மிளிர்வது திருக்குறள். அடக்கம், அருள், அறிவு, அன்பு, ஊழ்வினை, ஊக்கம், ஒழுக்கம், நாண், பண்பு, பொறை ஆகிய பத்துவகை உடைமைகளைக் குறித்து விரித்துரைக்கின்றார் தெய்வப் புலவர். Continue reading “அறிவும் பண்பும்”

செய்தித்தாள்

முன்னணி பத்திரிக்கைகள்

நம் அண்டை வீட்டுச் செய்தியிலிருந்து ஆயிரம் கல் தொலைவிலுள்ள நாடுகள், விண்வெளிக் கோளங்கள் ஆகியவற்றில் நிகழும் அதிசயச் செய்தி வரை நம்மிடம் கூறும் நண்பன் செய்தித்தாள். அதனால்தான் நாம் தினமும் அதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம். Continue reading “செய்தித்தாள்”

உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை.

ஒரு காட்டில் வாத்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொறித்தது.

பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.

ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து, அழகும் அடர்த்தியும் இல்லாத முடியுடன்  அசிங்கமாக இருந்தது.

அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. Continue reading “உங்களுக்கும் காலம் வரும்”

எறும்பு சொன்ன பாடம்

எறும்பு சொன்ன பாடம்

எறும்பு சொன்ன பாடம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்ற பாடம். அது என்ன என்று அறிய தொடர்ந்து படியுங்கள்

ஒரு அழகிய மலர்வனத்தில் எறும்பு ஏகாம்பரமும், வெட்டுக்கிளி வெள்ளியங்கிரியும் நண்பர்களாக வசித்து வந்தனர். Continue reading “எறும்பு சொன்ன பாடம்”