நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”

இனிது என்னும் பூந்தேன் இதழ்

இனிது

திக்கெட்டும் வாழன்பர் சேர்க்கும் படைப்புகளை

மிக்கநலம் தோன்ற வெளியிட்டு – மக்கள்

மனதெல்லாம் அள்ள மலருமே என்றும்

இனிதென்னும் பூந்தேன் இதழ்

இமயவரம்பன்

புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு

தமிழ்

திருவடியாய் குறளடிகள் கொண்டமொழி அம்மே

சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே

இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே

இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

Continue reading “புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு”

படைப்புலகின் நடுநாயகமான நடு

நடு

பிரான்ஸில் இருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு ஆகும். படைப்புலகின் நடுநாயகமான நடு இணையற்ற படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

“கலையில் உண்மையுண்டு; உண்மையெல்லாம் கலை அல்ல”எனும் தாரக மந்திரத்துடன் மிக அருமையான இணைய இதழாக இவ்விதழ் வெளிவருகிறது.

Continue reading “படைப்புலகின் நடுநாயகமான நடு”