சுவைமிகு சுடர்தமிழ்

சுவைமிகு சுடர்தமிழ்

ஆதியில் நின்ற அருமொழியாம் – அணி

ஆயிரம் கொண்ட தனிமொழியாம்

ஓதிடும் செம்மொழி யாவினுமே – புகழ்

ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!

Continue reading “சுவைமிகு சுடர்தமிழ்”

புனையுலக வெற்றியின் பதாகை

பதாகை

தமிழின் வெற்றிக்கொடியாக உலகம் முழுவதும் உலா வரும் இணையற்ற இணைய இதழ் “பதாகை” எனும் இணைய இதழாகும்.

மிகச்சரியான இலக்கியப் பாதையைச் சமைத்துக் கொண்டு, இலக்கிய ஆர்வலர்கள் போற்றும் வண்ணம் தரம் மிக்கதான படைப்புக்களை வெளியிடுவதைத் தன் நோக்கமாகக் கொண்ட சிறப்பை இவ்விதழ் பெற்றுள்ளது.

ஆழமான, அகலமான தரம்மிக்கதான தமிழ் மற்றும் பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படிக்க வேண்டுமானால், பதாகை இணைய இதழை நாடலாம். அவ்வளவு இலக்கியப் படைப்புகள் இங்கு நிறைந்திருக்கின்றன.

Continue reading “புனையுலக வெற்றியின் பதாகை”

கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2

கவிப்பேரரசு வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து நமக்குக் காலம் தந்த பரிசு. அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது கட்டுரை.

முதல் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது; அதேசமயம் நிலையில்லாதது. நிலையில்லாத வாழ்க்கையில் நாம் இந்த சமுதாயத்துக்கு நிலையான ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை, நமக்கு பல அறிஞர்களும் கவிஞர்களும் மேதைகளும் ஞானிகளும் கூறிச் சென்றுள்ளார்கள்.

ஒரு சாதாரண மனிதன் கல்வி, அறிவு இல்லாதவன்கூட இசையின் மூலம் அறிந்து கொள்ள பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

‘இளமை உன் தோளில்

இருக்கும் போதே

எது நிச்சயம்’ என்பதை சுட்டிவிடு என்று கவிதையில் கூறியவர்.

Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2”

புத்துலகு காட்டும் சொல்வனம்

சொல்வனம்

”கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!” எனும் தாரகச் சொல்லுடன் உலக இலக்கியமும் நவீன இலக்கியமும் பேசும் தமிழின் மிக முக்கியமான இணையதளம் சொல்வனம் ஆகும்.

பண்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைந்து, எங்கும் எதிலும் இலக்கியவாடை மட்டுமே அடிக்கும் மாபெரும் படைப்புச் சந்தை இது.

தீராத இலக்கிய அகோரப்பசியுடன் அலையும் ஒரு கூட்டம் உண்டென்றால், அது சொல்வனக் கூட்டம் தான்.

ஆழமும் அழகும் மிக்கதான இலக்கிய‌ வனம் தான் இந்தச் சொல்வனம்.

Continue reading “புத்துலகு காட்டும் சொல்வனம்”