உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை?

உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை?

நாம் நலமாக வாழ நம்முடைய உள்ளுறுப்புக்கள் மற்றும் புறஉறுப்புக்கள் ஆரோக்கியான நிலையில் இருப்பது மிகவும் அவசியமானது.

நாம் சில செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது, அவை நம்முடைய உடல் உறுப்புகளைப் பாதிப்படையச் செய்வதோடு நம்முடைய ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது.

உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை? அவை எவ்விதம் உடல்உறுப்புகளைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

Continue reading “உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை?”

மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?

மைசூர் மசாலா தோசை

மைசூர் மசாலா தோசை அட்டகாசமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோசை வகை.

காரத்தை விரும்பி உண்பவர்களுக்கும், மசாலா சுவை ரசிகர்களுக்கும் இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மசாலா தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை தோசையினுள் வைத்துக் கொடுப்பர்.

மைசூர் மசாலா தோசையில் உருளைக்கிழங்குடன் கார மசாலாவையும் வைத்துக் கொடுப்பர்.

Continue reading “மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?”

கழறிற்ற‌றிவார் நாயனார் – சுந்தரருடன் சிவனடிப்பேறு பெற்றவர்

கழறிற்றறிவார் நாயனார்

கழறிற்ற‌றிவார் நாயனார் சுந்தர மூர்த்தி நாயனாருடன் இணைந்து கிடைக்கதற்கரிய சிவனடியை பெற்றவர். இவர் சேரமான் பெருமாள் நாயனார் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

இவர் சிவனடியார் மேல் கொண்டிருந்த பேரன்பினால், உவர்மண் சிந்திய மேனியை உடையவரை சிவனடியாராக நினைத்து வணங்கியவர்.

சிவனடியாரான பாணபத்திரரின் வறுமையைப் போக்க, இறைவனார் திருமுகம் எழுதி பாணபத்திரரிடம் கொடுத்து, கழறிற்ற‌றிவார் நாயனார் இடத்து சேர்ப்பிக்கச் சொல்லி, பொருள் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பிய பெருமையை உடையவர்.

Continue reading “கழறிற்ற‌றிவார் நாயனார் – சுந்தரருடன் சிவனடிப்பேறு பெற்றவர்”

நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27

நீர் சுழற்சி

“டிக்.. டிக்.. டிக்..” என சுவர் கடிகாரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒலியை கவனித்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். நேரத்தை சரியாக காண முடியவில்லை. காரணம் வெளிச்சம் இல்லை.

மின்விளக்கிற்கான பொத்தானை அழுத்தினேன். மின்விளக்கு பளிச்சிட்டது. கடிகாரத்தில், நேரம் 3.20 எனக் காட்டியது.

இது பிற்பகல் நேரம். உடனே, சன்னல் கதவுகளை திறந்து பார்த்தேன். இருட்டாக இருந்தது. சன்னல் வழியே வானத்தை பார்த்தேன்.

கார்மேகம் சூழ்ந்திருந்து. குளிர்ச்சியும் இருட்டும் சேர்ந்திருந்த அந்த பிற்பகல் வேளை எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும்.

Continue reading “நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27”

புரிந்து படி – படிப்பது எப்படி?- பாகம் 4

புரிந்து படி

புரிந்து படி என்பதே, படிப்பது எப்படி என்ற கேள்வியின் பதில் ஆகும். படிப்பதனை புரிந்து படிக்க வேண்டும்.

குறுக்கு வழியில் சிலர், படிக்கும் பாடங்கள் என்ன சொல்ல வருகிறது என்பது புரியாமலேயே படிப்பார்கள்.

அவர்களுக்கான ஒரு வேடிக்கைக் கதையினைப் பார்ப்போம்.

மன்னர் ஒருவருக்கு அழகான இளவரசன் இருந்தார். மன்னருக்கு தனது மகன் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகனாக மாறவேண்டும் என்பது விருப்பம்.

Continue reading “புரிந்து படி – படிப்பது எப்படி?- பாகம் 4”