சுவாசம் கொள் ‍- கவிதை

எழுந்து ஓடு ஏற்றம் எடு!

அ.சதிஷ்ணா அவர்களின் நான்கு சிறிய கவிதைகள் இங்கே உள்ளன. படித்து ரசியுங்கள்.

அடைமழைதனிலே

நிலவொளிதனில் பெய்த மழையே
மனவொளிதனில் பொய்த்த மணியே
உனதரிய நினைவுக‌ள் எல்லாம்
எனதுள்ளே இடிகளாக இடிக்க‌
உடைந்தேன் நான் அடைமழைதனிலே! Continue reading “சுவாசம் கொள் ‍- கவிதை”

புதினா புலாவ் செய்வது எப்படி?

புதினா புலாவ் எளிதில் செய்யக் கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பொதுவாகவே புதினா புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இதனுடைய மணம் மற்றும் சுவை நிறைய பேருக்கு பிடித்தமான ஒன்று.

பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுத்து அனுப்புவது என்று யோசிப்பவர்களுக்கும், என்ன கொடுத்து அனுப்பினாலும் அப்படியே திருப்பிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பவர்களுக்கும் இது வரப்பிரசாதம். Continue reading “புதினா புலாவ் செய்வது எப்படி?”

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பதின்மூன்றாவது பாடல் ஆகும்.

சிவந்த மேனியில் வெண்ணீறு அணிந்த இறைவரான சிவபெருமானின் மீது வாதவூரடிகள் எனப்படும் மாணிக்கவாசகரால் திருவெம்பாவை பாடப்பட்டது. Continue reading “பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்”

சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே

நண்பனை சந்தித்த இருன்டினிடே

பகலில் ஓய்வு, இரவில் பயணம் என ஸ்வாலோ இன குருவிக்கூட்டம் மேலும் நான்கு நாட்கள், பயணத்தை தொடர்ந்தது.

அப்பொழுது, குடியிருப்புகள், கோபுரங்கள், வாகனங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் என மனிதனின் பிரம்மாண்ட படைப்புகளை கண்டு அவை வியந்தபடியே பயணித்தன. Continue reading “சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே”

சொல் ஏர் உழவர் தினம் (ஆசிரியர் தினம்) கவிதை

ஆசிரியர்

வகுப்பறை நுழைவாயிலின் இருபுறத்தில்

உட்புறம் சுமையாய் இருந்தது

வெளிப்புறம் சுகமாய் இருந்தது!

உந்தன் வருகையைக் கண்டால் அச்சத்தில்

உள்மனம் படபடக்கும்… Continue reading “சொல் ஏர் உழவர் தினம் (ஆசிரியர் தினம்) கவிதை”